writersamas.blogspot.in - சமஸ்

Example domain paragraphs

என் அன்புக்குரிய வாசகர்களுக்கு, வணக்கம்!

  ‘தி இந்து’ தமிழ் நாளிதழிலிருந்து விலகும்போது அடுத்த முயற்சியை உங்களிடம் தெரிவிப்பேன் என்று கூறியிருந்தேன். அந்த முயற்சி இப்போது கை கூடியிருக்கிறது. ‘அருஞ்சொல்.காம்’ - www.arunchol.com தளம்தான் அது!

இனி அன்றாடம் என்னுடைய எழுத்துகளை இங்கே வாசிக்கலாம். கூடவே தமிழின் முக்கியமான ஆளுமைகளின் கருத்துகள், படைப்புகளையும் வாசிக்கலாம். அன்றாடம் ஒரு ‘தலையங்கம்’, ஒரு ‘சிறப்புக் கட்டுரை’ அல்லது ‘சிறப்புப் பேட்டி’, தளத்தில் வெளியாகும் படைப்புகளை முன்வைத்து வெளியாகும் வாசகர்கள் - ஆளுமைகளின் விமர்சனங்களைத் தாங்கி வரும் ‘இன்னொரு குரல்’… இப்படி மூன்று பதிவுகள் மட்டுமே வெளியாகும்.